தன்ஆர்வலர்
பூவுலகின் நண்பர்கள் - இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வரும் பூவுலகின் நண்பர்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு, விவாதங்கள், பிரசுரங்கள், வெளியீடுகள், பொது நல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை செய்து வரும் பூவுலகின் நண்பர்கள், மேலும் சூழல் செயல்திறனாளர்களை இணைத்து சூழல் குறித்த ஆர்வத்தையும், அக்கறையையும் மேலும் பரவலாக்க திட்டமிட்டுள்ளனர்.

சூழல் குறித்த அக்கறை கொண்ட யாரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் சூழல் செயல்திறனாளராக இணையலாம். அவரவர் சக்திக்கேற்ப பணிகளை மேற்கொள்ளலாம். சூழல் குறித்த புதிய அம்சங்களை அடையாளம் காட்டலாம். சூழல் குறித்த தங்கள் அறிவையும், அனுபவத்தையும் பகிரலாம். உரிய நிபுணர்களிடமிருந்து தேவையான ஆலோசனைகளை பெறலாம். இதற்காக சூழல் குறித்த ஆர்வம் கொண்டோரை பதிவு செய்து உரிய பயிற்சி அளித்து சூழல் செயல் திறனாளராக உருவாக்கும் முயற்சியை பூவுலகின் நண்பர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சூழல் செயல்பாடுகளில் தற்போது அமைப்பு ரீதியாக செயல்படுவோரும் இந்த செயல்பாடுகளில் பங்கேற்கலாம். அவர்தம் அமைப்பு ரீதியான அடையாளங்களை இழந்துவிடாமல் சூழல் செயல்பாடுகளில் மேலும் செம்மையாக செயல்படுவதற்கான வழிமுறைகளை கண்டறியவும் பூவுலகின் நண்பர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளிலும், ஜாதி – மதம் சார்ந்த அமைப்புகளிலும் பதவி வகிப்போர் தவிர மற்றவர்கள் யாரும் பூவுலகின் நண்பர்களின் செயல்பாடுகளில் சூழல் செயல்திறனாளராக பங்கேற்கலாம்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் சூழல் செயல்திறனாளராக இணைந்து செயலாற்ற விருப்பமுள்ளவர்கள் எதிர்வரும் ஜூன் 30ம் தேதிக்குள் தங்களைப் பற்றிய சுயவிவரக்குறிப்பை இணைத்துள்ள படிவத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த சூழல் செயல்திறனாளர்களுக்கு சூழல் பிரசினைகளை கையாள்வது குறித்து உரிய நிபுணர்கள் உதவியுடன் அனுபவப்பகிர்தல் முகாமும், கருத்துப் பகிர்தல் முகாமும் நடத்தப்படும். தேவைப்படுபவர்களுக்கு வழிகாட்டுதலுக்கான ஏற்பாடும் செய்து தரப்படும்.

இந்த நிகழ்வுகளுக்கான காலம், இடம் போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

பூவுலகின் நண்பர்களுடன் சூழல் செயல்திறனாளராக இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாத இறுதிக்குள் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

பூவுலகின் நண்பர்கள் - இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு

சூழல் செயல்திறனாளர் பதிவு விண்ணப்பம்


 (in Numbers)
 (in Numbers)